Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

காஞ்சி - சேரன் கவிதைகள்
-5 %
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
காடாற்று
-4 %
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை...
₹86 ₹90
காட்டிலிருந்து வந்தவன்
-5 %
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. 'ஒரு துவக்கத்தின் கதை' இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுக..
₹133 ₹140
காட்டில் ஒரு மான்
-5 %
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில..
₹228 ₹240
காட்டில் நடந்த கதை
-5 % Out Of Stock
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்ணின் மனதை வாசித்தறிந்த கலைஞர் விபூதிபூஷண். அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிப்படுத்துகிறது. தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் மனித இயல்பு கொள்க..
₹90 ₹95
காதலின் புதிய தடம்
-5 %
காதலின் புதிய தடம் ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும் மானுடத்தின் மீது அக்கறை கொண்ட உளவியல் ஆலோசகராகவும் ஆனந்த் எதி..
₹143 ₹150
காதல் கடிதம்
-5 %
காதல் கடிதம்வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ஒரு “தமாஷான கதை“ என்று எழுதியவரே குறிப்பட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல...
₹95 ₹100
காதுகள்
Hot -5 %
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு கு..
₹190 ₹200
காந்தியை அறிதல்
-5 % Available
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான தரம்பால் மகாத்மா காந்தியின் மனவெழுச்சிகளையும் சிந்தனைகளையும் குறித்து முக்கியமான சில பார்வைகளை முன்வைக்கிறார். தன் எட்டாம் வயதில் தகப்பனாருடன் சென்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியைப் பார்த்த நாட்கள..
₹114 ₹120
காந்தியைக் கடந்த காந்தியம்
-5 %
காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது. ..
₹276 ₹290
காந்தியைக் கொன்றது தவறுதான்
-5 % Out Of Stock
ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு. புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும்..
₹95 ₹100
Showing 433 to 444 of 1288 (108 Pages)